Published : 24 Jun 2025 12:15 PM
Last Updated : 24 Jun 2025 12:15 PM
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டிஎன்ஏ’. இப்படத்தை பார்த்துவிட்டு பல்வேறு திரையுலகினர் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள். தற்போது இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
‘டிஎன்ஏ’ குறித்து சுதா கொங்கரா, “ஓர் அருமையான படம் பார்த்தேன். எப்போதும் போல நெல்சன் வெங்கடேசனின் எழுத்துகள் அருமை. அதர்வா முரளி, நிமிஷா சஜயன், சேத்தன், பாலாஜி சக்திவேல் மற்றும் பாட்டியின் அற்புதமான நடிப்பைப் பார்த்து பார்வையாளர்களுடன் கண்ணீர்விட்டு ஆரவாரம் செய்தேன். ‘டிஎன்ஏ’ ஓர் அழகு! என்று தெரிவித்துள்ளார்.
‘டிஎன்ஏ’ படத்தினை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் விற்கப்பட்டுவிட்டன.
Just saw a little gem of a film !! Fantastic writing as always #nelsonvenkatesan and superb performances by @Atharvaamurali, #Nimishasajayan, #chetan, #Balajisakthivel and the paatti…oh my!!!
Teared up and cheered with the audiences! A beauty -#DNA— Sudha Kongara (@Sudha_Kongara) June 23, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT