Published : 24 Jun 2025 07:47 AM
Last Updated : 24 Jun 2025 07:47 AM
நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ, மாநாடு, வணங்கான் உள்ளிட்ட படங்களைத் தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இப்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இவர் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில், “எமது நிறுவனத் தயாரிப்பில் எந்த படத்துக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறவில்லை. வளரும் நடிகர்கள் தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு செயல்படுங்கள். தவறான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT