Published : 21 Jun 2025 10:16 PM
Last Updated : 21 Jun 2025 10:16 PM
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் வரவேற்பைப் பெற்றது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற சிறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருந்தார். இதையடுத்து இதன் அடுத்த பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தவிர்த்து வேறு சில முக்கிய கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது மற்றொரு முக்கியமான சிறு கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார். ரஜினி - சிவராஜ்குமார் காட்சிகள் முதல் பாகத்தில் பேசப்பட்டது போல், இதில் ரஜினி - பாலகிருஷ்ணா காட்சிகள் பேசப்படும் எனக் கூறப்படுகிறது. ரம்யாகிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ்குமார், சுராஜ் வெஞ்சுரமுடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது தனது பிறந்தநாளை இயக்குநர் நெல்சன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நெல்சனுக்கு ரஜினிகாந்த் கேக் ஊட்டுகிறார். மற்றொரு புகைப்படத்தில் யோகிபாபுவும் இடம்பெற்றுள்ளார். நெல்சனுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Team #Jailer2 wishes our blockbuster director, @Nelsondilpkumar, a super happy birthday! #HBDNelson #HappyBirthdayNelson pic.twitter.com/6qST11YFjb
— Sun Pictures (@sunpictures) June 21, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT