Last Updated : 19 Jun, 2025 11:50 PM

 

Published : 19 Jun 2025 11:50 PM
Last Updated : 19 Jun 2025 11:50 PM

மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ - புதிய நாவல் எழுதியுள்ளதாக பகிர்வு!

தமிழில் ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அவர் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது? என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

ஸ்ரீ நடித்த படங்களுக்கு அவருக்கு சம்பளம் தரப்படாததே அவருடைய இந்த நிலைக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து ஸ்ரீயின் நண்பரும், இயக்குநருமான லோகேஷ் கனகராஜ், ஸ்ரீ-க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கடந்த சில நாட்களாக ஸ்ரீ குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் ஒரு புதிய நாவல் எழுதியுள்ளதாகவும், ‘மே ஐ கம் இன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த நாவலை அமேசான் கிண்டில் தளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மிக மோசமான நிலையில் இருந்த அவர் தற்போது பழையபடி மீண்டு வந்திருப்பது குறித்து நெட்டிசன்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x