Published : 18 Jun 2025 06:25 AM
Last Updated : 18 Jun 2025 06:25 AM

‘மனுஷி’ படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் சான்றிதழ்: உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் தகவல்

‘மனுஷி’ படத்​தில் இடம்​பெற்​றுள்ள ஆட்​சேபகர​மான காட்​சிகளை நீக்​கி​னால் சான்​றிதழ் வழங்​கு​வது குறித்து பரிசீலிக்​கப்​படும் என தணிக்கை வாரி​யம், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது.

ஆண்ட்​ரியா நடித்​துள்ள ‘மனுஷி’ படத்தை இயக்​குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்​பெனி தயாரித்​துள்​ளது. கோபி நயி​னார் இயக்​கி​யுள்​ளார். இந்​தப் படத்​துக்​குத் தணிக்கை வாரி​யம் சான்​றிதழ் வழங்க மறுப்பு தெரி​வித்​தது. இதையடுத்​து, நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்​டும் தணிக்கை செய்து சான்​றிதழ் வழங்​கக்​கோரி, தயாரிப்​பாளர் வெற்​றி​மாறன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்​கடேஷ் முன்பு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, படத்​தில் உள்ள ஆட்​சேபனைக்​குரிய காட்​சிகள், வசனங்களை நீக்​கி​னால் சான்​றிதழ் வழங்​கு​வது குறித்து பரிசீலிக்​கப்​படும் என தணிக்கை வாரி​யம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. வெற்​றி​மாறன் தரப்​பில், ஆட்​சேபகர​மான காட்​சிகள் மற்​றும் வசனங்​கள் என முக்​கிய​மான காட்​சிகளைத் தணிக்கை வாரி​யம் நீக்​கக் கூறு​வ​தாகத் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து நீதிப​தி, தணிக்கை வாரி​யத்​தின் ஆட்​சேபனையை எதிர்த்து வழக்கு தொடரலாம் என வெற்​றி​மாறனுக்கு அனு​ம​தி​யளித்து வழக்​கை முடித்​து வைத்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x