Published : 17 Jun 2025 04:13 PM
Last Updated : 17 Jun 2025 04:13 PM
‘கண்ணப்பா’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார். மோகன் பாபு தயாரிப்பு விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இப்படத்தில் பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால் உள்ளிட்டோர் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தினை பிரத்யேகமாக தனது நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த்துக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார் மோகன் பாபு.
ரஜினி படம் பார்த்தது தொடர்பாக விஷ்ணு மஞ்சு, “ரஜினிகாந்த் அங்கிள் ‘கண்ணப்பா’ படத்தைப் பார்த்தார். படம் முடிந்ததும் அவர் என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்தார். அவருக்கு படம் மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். ஒரு நடிகராக இந்தப் பாராட்டுக்கு 22 ஆண்டுகள் காத்திருந்தேன். இன்று நான் மிகவும் ஊக்கமாகவும், பணிவுடனும் நன்றியுடனும் இருக்கிறேன். ஜூன் 27-ம் தேதி ‘கண்ணப்பா’ வெளியாகவுள்ளது. இந்த உலகம் சிவபெருமானின் மாயாஜாலத்தை உணர ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் விஷ்ணு மஞ்சு.
இது தொடர்பாக மோகன்பாபு, “ஜூன் 15-ம் தேதி அன்று ‘பெத்தராயுடு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதே நாளில், எனது நண்பர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் ‘கண்ணப்பா’ படத்தைப் பார்த்தார். அப்படம் முடிந்த பின்பு அவர் அளித்த அன்பு, அரவணைப்பு மற்றும் ஊக்கம் என்னால் ஒருபோதும் மறக்க முடியாத ஒன்று” என்று தெரிவித்துள்ளார் மோகன் பாபு.
On June 15, Pedarayudu completed 30 glorious years since its theatrical release.
And on the same day, my best friend @rajinikanth watched #Kannappa along with his family.
The love, warmth, and encouragement he gave after the film is something I will never forget.
Thank you,… pic.twitter.com/u5iqXlsjfr— Mohan Babu M (@themohanbabu) June 16, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT