Published : 14 Jun 2025 08:45 PM
Last Updated : 14 Jun 2025 08:45 PM
திருமணம் குறித்த வதந்தி பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். கடந்த சில நாட்களாக இசையமைப்பாளர் அனிருத்துக்கும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஐபிஎல்லில் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார் காவ்யா மாறன். இதனால் இந்த வதந்தி வைரலாக பரவியது.
இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் அனிருத், “கல்யாணமா… தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது தென்னிந்திய திரையுலகில் தயாராகி வரும் ’கூலி’, ‘ஜெயிலர் 2’, ‘ஜனநாயகன்’, ‘மதராஸி’, ‘கிங்டம்’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘தி பாரடைஸ்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருபவர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக ரஜினி மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோருக்கு மட்டுமன்றி இசையமைப்பாளர் அனிருத்துக்கும் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT