Published : 10 Jun 2025 01:41 PM
Last Updated : 10 Jun 2025 01:41 PM
ஆர்யா நடித்துள்ள ‘அனந்தன் காடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு.
2023-ம் ஆண்டு ஆர்யா நாயகனாக நடித்து வெளியான படம் ‘காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம்’. அதனைத் தொடர்ந்து சில படங்களில் வில்லன், கவுரவ கதாபாத்திரம் என நடித்து வந்தார். தற்போது மீண்டும் நாயகனாக திரும்பி இருக்கிறார் ஆர்யா. இதற்கு ‘அனந்தன் காடு’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
வினோத் குமார் தயாரித்துள்ள இப்படத்தினை ஜீயன் கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கிறார். இதன் கதையினை முரளி கோபி எழுதியிருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘ரன் பேபி ரன்’ படத்தினை இயக்கியவர் தான் ஜீயன் கிருஷ்ணகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகி இருக்கிறது.
இதில் ஆர்யா, இந்திரன்ஸ், முரளி கோபி, ரெஜினா, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக யுவா, இசையமைப்பாளராக அஜ்னீஷ் லோக்நாத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
Here's the Title Teaser & First look posters of #Ananthankaadu
— Arya (@arya_offl) June 9, 2025
Hope u all like it
Tamil:
https://t.co/kTOBdYURM3
Malayalam
https://t.co/L0EGFXZStM@ministudiosllp @vinod_offl @JiyenKrishna @AJANEESHB @aditi1231 @divomusicindia @RIAZtheboss @ParasRiazAhmed1 pic.twitter.com/w44T2W7hhG
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT