Published : 05 Jun 2025 05:03 PM
Last Updated : 05 Jun 2025 05:03 PM
திரையரங்குகளில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் ‘முத்தமழை’ பாடல் இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. சென்னையில் ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சின்மயி பாடிய ‘முத்தமழை’ என்ற பாடல் இணையத்தில் வைரலானது. பலரும் அவருடைய குரலைக் கேட்டு மெய்மறந்தார்கள். ஆனால், படத்தில் பாடகி தீ குரலில் இப்பாடல் இடம்பெற்றிருப்பதாக படக்குழு தெரிவித்தது.
இதனிடையே, இன்று ‘தக் லைஃப்’ படத்தைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் ‘முத்தமழை’ பாடலே படத்தில் இடம்பெறவில்லை. இது தொடர்பாக பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமன்றி படத்தின் முக்கியமான வில்லனே ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் எனவும் ஒரு தரப்பினர் குறிப்பிட்டு வருகிறார்கள். மேலும், படத்துக்கும் எதிர்மறை விமர்சனங்களே இணையத்தை ஆட்கொண்டுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாசிக்க > ‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT