Published : 04 Jun 2025 06:03 AM
Last Updated : 04 Jun 2025 06:03 AM
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், ‘ஜனநாயகன்’. இதில் பாபி தியோல், பூஜாஹெக்டே, மமிதா பைஜூ என பலர் நடிக்கின்றனர்.
நடிகர் விஜய்,தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி இருப்பதால் இதுதான் அவருக்குக் கடைசி படம். இதனால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்று வந்தன.
தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பின் இறுதி நாளில், பணியாற்றிய அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளில் இந்தப் படத்தின் டீஸர் வெளியாக இருக்கிறது என்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT