Published : 22 May 2025 07:13 AM
Last Updated : 22 May 2025 07:13 AM

தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித்குமார்!

நடிகர் அஜித்குமார், சர்வதேச கார் பந்தயங்களில் இப்போது பங்கேற்று வருகிறார். துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்குமாரின் அணி, 3-வது இடம் பிடித்தது. தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் 3-வது இடமும் பெல்ஜியத்தில் நடந்த ஸ்பா பிரான்ஸ் ரேஸில் இரண்டாவது இடமும் பிடித்தது.

கடந்த வாரம் நெதர்லாந்தில் நடந்த ஜிடி 4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்ற அவர், அடுத்து வரும் 24-ம் தேதி இத்தாலியில் நடக்கும் மிசானோ வேர்ல்டு சர்க்கியூட் ரேஸில் பங்கேற்கிறார்.

இதற்கிடையே, தனது ரோல் மாடலும், மறைந்த கார் ரேஸ் வீரருமான பிரேசிலை சேர்ந்த அயர்டன் சென்னா சிலைக்கு அஜித்குமார் அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த 1994-ல் நடைபெற்ற சான் மேரினோ கிராண்ட் பிரிக்ஸ் கார் ரேஸில் நடந்த விபத்தில் அயர்டன் சென்னா உயிரிழந்தார். அவர் மறைவு பார்முலா-1 பாதுகாப்பு விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாலியின் இமோலாவில் உள்ள அவர் சிலை முன் மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித்குமார், அவரது கால டியில் ஹெல்மெட்டை வைத்து முத்தமிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x