Last Updated : 21 May, 2025 10:01 PM

 

Published : 21 May 2025 10:01 PM
Last Updated : 21 May 2025 10:01 PM

ரஹ்மான் இதம், த்ரிஷா ஈர்ப்பு... ‘தக் லைஃப்’ பட ‘சுகர் பேபி’ சிங்கிள் எப்படி?

‘தக் லைஃப்’ படத்தின் ‘சுகர் பேபி’ பாடல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஹ்மானின் இதமூட்டும் இசையும், த்ரிஷாவின் தோற்றமும் வெகுவாக ஈர்த்துள்ளது.

கமல்ஹாசனும் மணிரத்னமும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணைந்துள்ள படம், ‘தக் லைஃப்’. இதில் சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் ‘சுகர் பேபி’ சிங்கிள் பாடல் புதன்கிழமை மாலை வெளியானது. ‘இருவர்’ படத்தின் ‘ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி’ பாடலை நினைவூட்டும் வகையில், ஈர்ப்பிசையுடன் கொண்டுள்ள காட்சி அமைப்புகள் வசீகரிக்கின்றன. 2கே யுகத்துக்கு தீனி போடும் வகையில் இது அமைந்துள்ளது.

காதலும் காமமும் குழைத்த வரிகளுடன் ரஹ்மானின் இதமூட்டும் இசையுடன், த்ரிஷாவின் தோற்றமும் நளின அசைவுகளும் ‘என்ன வேணும் உனக்கு...’ என்ற ரசிகர்களின் தாகத்தைப் போக்கும் வகையில் ரிப்பீட் மோடுக்கு அழைத்துச் செல்கிறது. அடுத்தடுத்த நாட்களில் இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு முதன்மை ‘சோர்ஸ்’ ஆக மாறும் அத்தனை அம்சமும் கொண்ட பாடலாகவும் தெரிகிறது. ‘சுகர் பேபி’ வீடியோ லிங்க்…

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x