Published : 04 May 2025 10:15 AM
Last Updated : 04 May 2025 10:15 AM
‘பார்க்கிங்’ படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்து இயக்கும் படத்தில் சிலம்பரசன் டிஆர் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
கல்லூரி பின்னணியில் கமர்ஷியல் படமாக உருவாகும் இதில் சிலம்பரசன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவருடன் சந்தானம் இணைந்து நடிக்கிறார். கயாது லோஹர் நாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் விடிவி கணேஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT