Published : 03 May 2025 01:29 PM
Last Updated : 03 May 2025 01:29 PM
’குட் பேட் அக்லி’ மே 8-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழகத்தில் அஜித் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது. அஜித் ரசிகர்களும் இப்படத்தினைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.
தற்போது இப்படம் மே 8-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பினை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஓடிடியில் இப்படம் எந்த மாதிரியான விமர்சனத்தை எதிர்கொள்ளப் போகிறது என்பது தெரியவரும்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டது.
Avaru rules ah avare break pannitu velila varaaru na… sambhavam iruku. 8 May anniku sambhavam irukku.
— Netflix India South (@Netflix_INSouth) May 3, 2025
Watch Good Bad Ugly on Netflix, out 8 May in Tamil, Hindi, Telugu, Kannada and Malayalam#GoodBadUglyOnNetflix pic.twitter.com/BkISFURnff
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT