Published : 16 Apr 2025 06:45 PM
Last Updated : 16 Apr 2025 06:45 PM
இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சி.எஸ்.அமுதன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இந்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. தணிக்கை சான்றிதழில் இசையுரிமை நிறுவனத்திடம் இருந்து அனுமதி வாங்கியதை வைத்து பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக சி.எஸ்.அமுதன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2022-ம் ஆண்டு ‘ரத்தம்’ படம் தொடர்பான அறிமுக வீடியோவில் ‘ஒரு கூட்டு கிளியாக...’ பாடலை பயன்படுத்தி இருந்தார். அந்தப் பதிவினைக் குறிப்பிட்டு சி.எஸ்.அமுதன், “இப்பாடலை பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டு இளையராஜாவின் குழுவைத் தொடர்பு கொண்டோம்.
எங்கள் தயாரிப்பாளர்கள் பணம் கொடுப்பதற்கு தயாராகவே இருந்தனர். ஆனால், பணம் எதுவும் தேவையில்லை எனவும், பயன்படுத்திக் கொள்ளவும் என்று அவர்கள் தெரிவித்தார்கள். அவர் (இளையராஜா) தன்னிடம் அனுமதியை மட்டுமே எதிர்பார்க்கிறார். அது நாம் செய்யக்கூடியது தான். ஒரு துறையாக நாம் அவருடன் நிற்கவில்லை என்றால், வேறு யார் தான் அதற்கு தகுதியானவர்?” என்று தெரிவித்துள்ளார் சி.எஸ்.அமுதன்.
பின்னணி என்ன? - அஜித், த்ரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி'. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்...’, ‘இளமை இதோ இதோ...’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், ‘குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஒருவார காலத்துக்குள் சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்க வேண்டும் என்றும் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
When we contacted Raja’s team for permission to use this song our producers were more than willing to pay.
— CS Amudhan (@csamudhan) April 15, 2025
We were told by them that no payment was needed & that we could go ahead.
The man just wants to be acknowledged.
It’s the least we can do.
If we don’t stand with him… https://t.co/jEkrUQFfiD
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT