Published : 15 Apr 2025 05:37 PM
Last Updated : 15 Apr 2025 05:37 PM
சூரி நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் மே 16-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
‘கருடன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சூரி நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘மாமன்’. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் மே 16-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்குள் பணிகளை முடிக்க படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது.
இதன் படப்பிடிப்பை முழுக்க திருச்சியை சுற்றியே படமாக்கி முடித்திருக்கிறது படக்குழு. இதன் கதையை சூரி எழுத, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜன். முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகி வரும் கமர்ஷியல் படம் இதுவாகும். ஆகையால் கோடை விடுமுறைக்கு வெளியிட்டு விட வேண்டும் என்ற முனைப்பிலேயே படக்குழு பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
‘மாமன்’ படத்தின் சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவனும் நடித்துள்ளார்.
‘விலங்கு’ வெப்சீரிஸ் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை ‘கருடன்’ படத்தை தயாரித்தே குமாரே தயாரித்துள்ளார்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
அனைவருக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க பெற இறைவனை வேண்டுகிறேன்
மே16 முதல் #மாமன் உங்கள் அபிமான திரையரங்குகளில்#Maaman Directed by @p_santh
A @HeshamAWmusic Musical
Produced by @kumarkarupannan @larkstudios1_ #MaamanFromMay16… pic.twitter.com/798FpDlbqm— Actor Soori (@sooriofficial) April 14, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT