Published : 15 Apr 2025 05:21 PM
Last Updated : 15 Apr 2025 05:21 PM
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே சர்ச்சையில் சிக்கியது. முதலில் தலைப்பு சர்ச்சையில் சிக்கியது, பின்பு படத்தின் பட்ஜெட் அதிகமாவதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இவ்வாறு பல்வேறு சிக்கல்களை கடந்து, இப்போது முழுமையாக படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.
தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட இருக்கிறது. செப்டம்பரில் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி வெளியாக இருக்கிறது. இதுவரை ஒரே ஒரு பாடல் மட்டுமே வெளியிட்டுள்ளது படக்குழு. அதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் ரெளடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘டிராகன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இப்படம் வெளியாக இருப்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
It’s a shoot wrap for #LIK !!
— Seven Screen Studio (@7screenstudio) April 14, 2025
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் #LoveInsuranceKompany #LIK
#VigneshShivan @pradeeponelife @IamKrithiShetty@iam_SJSuryah @anirudhofficial #RaviVarman @iYogiBabu @Gourayy @PradeepERagav@PraveenRaja_Off @SonyMusicSouth @Rowdy_Pictures… pic.twitter.com/0hqY70ODBI
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT