Published : 14 Apr 2025 12:56 PM
Last Updated : 14 Apr 2025 12:56 PM
நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
சில நாட்களாக ஸ்ரீயின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஸ்ரீயின் இந்த நிலைக்கு காரணம் அவருக்கு திரையுலகில் முறையான சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறினார்கள். இதனை முன்வைத்து பலரும் ‘இறுகப்பற்று’ தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபுவை கடுமையாக சாடினார்கள்.
இந்தச் சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “ஸ்ரீயின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை பற்றி நாங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளோம். நாங்கள் உட்பட அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீண்ட காலமாக தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது குறித்து ஏராளமான ஊகங்கள் பரவி வருகின்றன.
ஆனால், ஸ்ரீயை தொடர்பு கொண்டு அவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்குக் கொண்டு வருவதே முதல் முன்னுரிமை. அதை அடைய யாராவது எங்களுக்கு உதவ முடிந்தால் மிகவும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவின் மூலம் ‘இறுகப்பற்று’ தயாரிப்பு நிறுவனத்தின் மீது எழுந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.
We ar genuinely concerned about the health and well being of Shri. His family and friends including us are trying to reach him for a long time. It is so unfortunate that there is so much speculation forming around it. But reaching Shri and bring him back to good health will be…
— SR Prabu (@prabhu_sr) April 14, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT