Published : 12 Apr 2025 10:26 PM
Last Updated : 12 Apr 2025 10:26 PM
இணையத்தில் நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.
’வழக்கு எண் 18/9’, ’மாநகரம்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’ மற்றும் ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. இவர் நடித்த படங்கள் யாவுமே வித்தியாசமான படங்கள் என்பதால், விமர்சகர்கள் மத்தியில் இவருக்கென்று நல்ல பெயர் உண்டு. தற்போது இவருடைய புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் அனைத்துமே இணையத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்ரீயின் சமூக வலைதளத்தில் அவருடைய சமீபத்திய புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரத் தொடங்கினார்கள். அதில் உடல் மிகவும் இழைத்து, முடியின் கலரை முழுமையாக மாற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார் ஸ்ரீ. எதற்காக இப்படி மாறியிருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.
சமீபத்தில் எந்தவொரு படத்திற்காகவும் யாருமே இவரை அணுக முடியவில்லை என்று தமிழ் திரையுலகில் ஒரு பேச்சு நிலவியது. அதனை உண்மையாக்கும் விதமாக இவரது பதிவுகள் அமைந்திருக்கிறது. பலரும் இந்த புகைப்படங்களை வைத்து லோகேஷ் கனகராஜை குறிப்பிட்டு இவருக்கு உதவி செய்யவும் என கூறியிருக்கிறார்கள். எதற்காக இப்படி மாறினார், என்னவாயிற்று இவருக்கு என்பது விரைவில் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT