Last Updated : 12 Apr, 2025 08:07 AM

 

Published : 12 Apr 2025 08:07 AM
Last Updated : 12 Apr 2025 08:07 AM

”தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா” - மீண்டும் டிரெண்ட் ஆகும் பிரியா பிரகாஷ் வாரியர்!

2017 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு அடார் லவ்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானர் பிரியா பிரகாஷ் வாரியர். அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் சில நொடிகளே வரும் ஒரு காட்சியின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். புருவத்தை தூக்கியபடி கைகளை துப்பாக்கி போல அவர் செய்த சைகை சமூக வலைதளங்களில் பல மாதங்களுக்கு டிரெண்டிங்கில் இருந்தது.

அதன் மூலம் சமூக வலைதளங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளும் அவருக்கு வந்தன. பாலிவுட் நடிகர்களைப் பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.

அதன்பிறகு சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ரீல்ஸ், போட்டோஸ் என ஆக்டிவ் ஆக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 10 அன்று அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் வெளியானது. இதில் பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் 90களில் சிம்ரன் ஆடிய ஹிட் பாடலான ‘தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு இப்படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடனமாடியிருந்தார்.

இதனையடுத்து சிம்ரனின் நடனத்தை அப்படியே ரீகிரியேட் செய்திருப்பதாக ரசிகர்கள் பலரும் பிரியா பிரகாஷ் வாரியரை பாராட்டி வருகின்றனர். பலரும் அந்த பாடலை கட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் தற்போது மீண்டும் டிரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர்.

படத்தில் தன்னுடைய அனுபவம் குறித்தும் உடன் நடித்த நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x