Published : 05 Apr 2025 05:36 PM
Last Updated : 05 Apr 2025 05:36 PM
‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, மே மாதம் வெளியீடு என அறிவித்துள்ளது படக்குழு.
சத்யராஜ் - காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய படத்துக்கு ‘மெட்ராஸ் மேட்னி’ என பெயரிட்டுள்ளது படக்குழு. மேலும், இப்படம் மே மாதம் வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தில் காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் அறிவியல் சார்ந்த புனைவு கதை எழுதும் மூத்த எழுத்தாளராக நடித்துள்ளார்.
ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு கே.சி.பாலஸ்ரங்கன் இசையமைத்திருக்கிறார். ஜாக்கி கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சமூஸ்கி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தினை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தை 'அருவி', 'ஜோக்கர்', 'கைதி' போன்ற திரைப்படங்களை வழங்கிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. பொழுதுபோக்கு அம்சம் உள்ள நகைச்சுவை படமாக இது இருக்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
TITLE REVEAL @DreamWarriorpic presents, #MadrasMatinee
A @MadrasMotionPic Production
Written & directed by - @keyanmk@kaaliactor @Roshni_offl @Vishva_actor @gk_anand @KCBalasarangan @jacki_art @nandini_maran @samuski @MomentEntertain @cinemapayyan @proyuvraaj pic.twitter.com/lrN4iG5IC8— DreamWarriorPictures (@DreamWarriorpic) April 4, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT