Published : 30 Mar 2025 06:16 PM
Last Updated : 30 Mar 2025 06:16 PM
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வந்த படம் ‘பிளாக்மெயில்’. பல்வேறு காரணங்களால் இப்படம் திட்டமிட்டப்படி நடைபெறாமல் இருந்தது. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மே மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
தற்போது ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மு.மாறன். அவருடைய இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘பிளாக்மெயில்’.
இதன் ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ‘பிளாக்மெயில்’ படத்தில் தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
Happy to launch the first look poster of @jds_filmfactory First feature film, ‘BLACKMAIL’ directed by @mumaran1#jdsfilmfactory #blackmailFirstLook @gvprakash @teju_ashwini_ @Act_Srikanth @thebindumadhavi @linga_offcl @thilak_ramesh @ActorMuthukumar @SamCSmusic @Sanlokesh pic.twitter.com/IHF4UTXpGc
— Ravi Mohan (@iam_RaviMohan) March 29, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT