Published : 17 Feb 2025 12:47 PM
Last Updated : 17 Feb 2025 12:47 PM
சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று சிவகார்த்திகேயன் தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்களின் குழுவினர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவரது ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
‘அமரன்’ படத்தை தயாரித்த கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில், “தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் என பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தலைப்புடன் கூடிய வீடியோ இன்று காலை 11:30 மணியளவில் வெளியானது. அந்த படம் ‘மதராஸி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் என பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.@Siva_Kartikeyan pic.twitter.com/drSNaMxXBR
— Kamal Haasan (@ikamalhaasan) February 17, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT