Published : 12 Feb 2025 08:49 AM
Last Updated : 12 Feb 2025 08:49 AM
இந்த ஆண்டு ஜனவரியில் 26 படங்கள் வெளியாயின. இதில், ‘மத கஜ ராஜா’ ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது. ‘குடும்பஸ்தன்’ படமும் வெற்றிப் படமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த மாதம் 6-ம் தேதி அஜித்குமார் நடித்த ‘விடாமுயற்சி' வெளியானது. 7-ம் தேதி தெலுங்கு படமான ‘தண்டேல்’ வெளியானது. வரும் 14-ம் தேதி, காதலர் தினத்தை முன்னிட்டு 10 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா, 2கே லவ் ஸ்டோரி, ஃபயர், காதல் என்பது பொதுவுடைமை, அது வாங்கினால் இது இலவசம், தினசரி, படவா, கண் நீரா, 9 ஏஎம் 9 பிஎம், டப்பிங் படமான கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடைசி நேரத்தில் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT