Published : 11 Feb 2025 01:12 PM
Last Updated : 11 Feb 2025 01:12 PM
விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருப்பவர் லலித் குமார். இவர் விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பர். இவருடைய மகன் எல்.கே.அக்ஷய் குமார் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தினை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படியாக கொண்டு இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார் ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ். இக்கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதில் அக்ஷய் குமாருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு. ‘டாணாக்காரன்’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அதன் இயக்குநர் கதையில் நடிக்கவுள்ளார் விக்ரம் பிரபு.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக பிலோமின் ராஜ், கலை இயக்குநராக ஸ்ரீமன் ராகவன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். விக்ரம் பிரபு மற்றும் அக்ஷய்குமார் இருவருடன் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT