Published : 10 Feb 2025 11:39 AM
Last Updated : 10 Feb 2025 11:39 AM
பார்வதி நாயர் மற்றும் ஆஷ்ரித் அசோக் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்று (பிப்.10) இருவருக்கும் திருவான்மியூரில் வைத்து திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பார்வதி நாயரின் திருமண நிகழ்வின் முன்வைபவங்களிலும் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். தமிழில் ‘உத்தம வில்லன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.
விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ‘ஆலம்பனா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT