Published : 08 Feb 2025 10:14 PM
Last Updated : 08 Feb 2025 10:14 PM
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதினை ‘பேட் கேர்ள்’ (Bad Girl) திரைப்படம் வென்றுள்ளது.
வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இதன் டீஸர் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இணையத்தில் பலரும் இதனை கடுமையாக விமர்சித்தார்கள். இதனிடையே, இப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் பணியையும் படக்குழு மேற்கொண்டது.
அதில் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான NETPAC விருதை வென்றுள்ளது ‘பேட் கேர்ள்’ திரைப்படம். இது தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்கும் தருணம் என்று படக்குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
NETPAC விருதானது (Network for the Promotion of Asian Cinema) ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த ஒரு தனித்துவமான திரைப்படத்துக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது குறிப்பாக வளர்ந்து வரும் இயக்குநர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் விதத்தில் முதல் மற்றும் இரண்டாவது திரைப்படங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த அங்கீகாரத்தின் மூலம், ‘பேட் கேர்ள்’ திரைப்படம் தனது இடத்தை, தமிழில் கதை சொல்லலுக்கான சிறப்பையும் மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கான வலிமையையும் உலகளாவிய சினிமா அரங்கில் உறுதிப்படுத்தியுள்ளது.
‘பேட் கேர்ள்’ படத்தினை எழுதி இயக்கியுள்ளார் வர்ஷா பரத். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இதில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், Teejay அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT