Last Updated : 05 Feb, 2025 05:35 PM

 

Published : 05 Feb 2025 05:35 PM
Last Updated : 05 Feb 2025 05:35 PM

Click Bits: அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் எவற்றை எதிர்பார்க்கலாம்?

அஜித்​தின் ‘விடா​முயற்​சி’ படம் வியாழக்கிழமை (பிப்.6) ரிலீஸாகிறது. இப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கத்தக்க அம்சங்கள் குறித்து இயக்குநர் மகிழ் திரு​மேனி பகிர்ந்தவற்றில் இருந்து சில தகவல்கள்...

“விடாமுயற்சி படத்தின் மூலக் கதை என்னுடையது இல்லை. அஜித் இமேஜுக்​கும் இந்தப் படத்துல அவர் பண்ணி​யிருக்கிற கேரக்​டருக்​கும் தொடர்பே இல்லை.”

“விடாமுயற்சி ஒரு ஒரு மாஸ் என்டர்​டெ​யினர் படம் இல்லை. ரசிகர்கள் அதை எதிர்​பார்த்து வரவேண்​டாம். அஜித் தான் இப்படி படம் பண்ணணும்னு ஆசைப்​பட்​டார்.”

“அஜித்துக்கு உள்ள பிம்பத்துக்கு முற்றி​லும் முரண்​பாடா ‘விடாமுயற்சி’ இருக்​கும். இதுல ஒரு சூப்பர் ஹீரோவை எதிர்​பார்த்து வந்தீங்​கன்னா, அப்படி இருக்காது.”

“நம்மள்ல ஒருத்தன் ஹீரோவா இருந்தா எப்படி​யிருக்​குமோ அதுதான் ‘விடாமுயற்சி’. இந்தப் படம் என்னையும் அஜித்தையும் ‘கம்ஃப்ர்ட் ஸோன்’ல இருந்து வெளிய வரவெச்சுது.”

“ரசிகர்கள் தங்களோட முன் முடிவுகளை கழற்றி வச்சுட்டு ‘விடாமுயற்சி’ படத்தை பார்த்தால், நிச்​சயமா சுவாரஸ்​யமான படமா இருக்கும்.”

“ஒரு பயணம் தொடர்பான கதைதான் ‘விடாமுயற்சி’ படம். இது, கணவன் - மனைவியோட பயணம். அதுக்கு இடையில நடக்கிற சம்பவங்​கள்தான் திரைக்கதை.”

“ஆக்‌ஷன், கார் சேஸிங், சஸ்பென்ஸ், த்ரில்​லிங் விஷயங்கள் எல்லாமே ‘விடாமுயற்சி’யில இருக்​கும். ஆனா, எதார்த்​தத்​துக்கு நெருக்கமா இருக்​கும்.”

“அஜித் - அர்ஜுன் இடையிலான உரையாடல்​கள், மோதிக்கிற தருணங்​கள் பார்​வை​யாளர்களை உட்கார வைக்​கும். அதுக்கு அவங்​களோட நடிப்பு தான் காரணமா இருக்​கும்.”

“விடாமுயற்சி படத்துல நல்ல கதை இருக்கு. நாயகியாக த்ரிஷா நடிச்சிருக்காங்க. குடும்பத்தோட ரசிக்கக் கூடிய கதை. பெண்​களுக்கு ரொம்ப பிடிக்​கும்.”

“விடாமுயற்சி கதை தற்போது நடக்கிற மாதிரி​யும், 12 வருஷத்​துக்கு முன்னால நடக்கிற மாதிரி​யும் இருக்கு. வித்​தி​யாசத்தை காட்​ட ரொம்ப மெனக்கெட்டு, உடலைக் குறைச்​சார் அஜித்.”

“விடாமுயற்சி படத்துல கேரக்டருக்கு ஏத்தபடி உடம்பை குறைச்சி ரொம்​ப ‘ஃபிட்​’டா இருக்​கார் அஜித்​. படத்​துல அந்​தக் ​காட்​சிகள்​ ரசிகர்​களுக்​கு ரொம்​ப பிடிக்​கும்​.”

“இவ்வளவு அழகான, ஸ்டைலான, பவர்ஃபுல்லான அஜித்தை சீனுக்கு சீன் ஆச்சரியத்தோடு ரசிகர்கள் பார்க்க வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x