Published : 01 Feb 2025 06:54 PM
Last Updated : 01 Feb 2025 06:54 PM
நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் அன்று வெளியாக இருந்து தள்ளிவைக்கப்பட்ட இப்படம், வரும் 6-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ட்ரெய்லரின் பிடிஎஸ் (Behind the scenes) வீடியோவையும் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. நேற்று ‘விடாமுயற்சி’ திரைப்படத்துக்கு தணிக்கைக் குழு யு /எ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சவதீகா’ பாடலின் ரீலோடட் வெர்ஷனை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
The ANI X ANTO version of #Sawadeeka is pure vibe material! Turn up the volume and groove to the trippy beats.
— Lyca Productions (@LycaProductions) February 1, 2025
https://t.co/iWpIpnLZxE
FEB 6th in Cinemas Worldwide #Vidaamuyarchi #Pattudala #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni… pic.twitter.com/CqPUa96qH9
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT