Published : 31 Jan 2025 11:40 AM
Last Updated : 31 Jan 2025 11:40 AM
நடிகர் விஷாலை காதலித்து வருவதாக பரவும் வதந்திகளை மறுத்துள்ள நடிகை அபிநயா, தனது 15 வருட காதல் வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. பேச, கேட்க இயலாத மாற்றுத் திறன் நடிகையான இவர், தனது நடிப்பாற்றலால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர். மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜுக்கு ஜோடியாக இவர் நடித்து சமீபத்தில் வெளியாகி, ஓடிடியிலும் கவனம் பெற்றுள்ள ‘பணி’ (Pani) படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்புத் திறனும் வெகுவாக பேசப்பட்டது.
இதனிடையே, நடிகர் விஷாலுடன் ‘பூஜை’ மற்றும் ‘மார்க் ஆண்டனி’ படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரும் விஷாலும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த வதந்தியை மறுத்துள்ள அபிநயா, தனது காதல் வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், “மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷனில் கை நடுங்கியபடி விஷால் பேசியிருந்தார். இது குறித்து அவரிடம் மெசேஜ் அனுப்பி உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவர் ‘வைரல் காய்ச்சல்தான். இப்போது நலமாக உள்ளேன்’ என்று கூறினார். விஷால் மிகவும் நல்லவர். சைகை மொழியை கற்றத்தர கூறி அடிக்கடி கேட்பார்.
நடிகர் விஷாலுடன் என்னைப் பற்றி வரும் வதந்தி எல்லாம் ரொம்ப முட்டாள்தனமானது. விஷால் எனக்கு ப்ரொப்போஸ் பண்ணாரு, எங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகுது என்றும் பரவும் செய்தியை எல்லாம் நம்பாதீர்கள்
நான் இப்போது ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கேன். என்னுடைய பால்ய கால சிநேகிதர்தான் என் பாய் ஃபிரண்ட். நாங்கள் 15 வருடங்களாக இந்த உறவைத் தொடர்கிறோம். நாங்கள் இன்னும் எங்களது திருமணம் பற்றி திட்டம் எதுவும் செய்யவில்லை, அதற்கெல்லாம் நேரம் உள்ளது” என்று அபிநயா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT