Published : 14 Jan 2025 01:00 AM
Last Updated : 14 Jan 2025 01:00 AM
பொங்கல் பண்டிகையை ஒட்டி, கேம் சேஞ்சர், வணங்கான், மதகஜராஜா, காதலிக்க நேரமில்லை, மெட்ராஸ்காரன், தருணம், நேசிப்பாயா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தியேட்டருக்கு போட்டியாகத் தொலைக்காட்சிகளும் பொங்கல் விருந்தாக புதுப்படங்களை ஒளிபரப்ப இருக்கின்றன. அதன் விவரம்:
விஜய் டிவி: இன்று (ஜன.14) 12.30 மணிக்கு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை', மாலை 5.30 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்து சூப்பர் ஹிட்டான ‘அமரன் ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன. மாட்டுப் பொங்கலான நாளை (ஜன.15) காலை 11 மணிக்கு ‘அரண்மனை 4', பிற்பகல் 3 மணிக்கு ‘மஞ்சும்மள் பாய்ஸ்', மாலை 6 மணிக்கு கார்த்தி நடித்த ‘மெய்யழகன்' ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
ஜீ தமிழ்: இன்று காலை10.30 மணிக்கு விஷால் நடித்த ‘ரத்னம்', 3.30 மணிக்கு ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்', மாலை 6.30 மணிக்கு விஜய் நடித்த ‘கோட்' ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன. நாளை (ஜன.15), காலை 10.30 மணிக்கு சிரஞ்சீவி, ராம் சரண் நடித்த ‘ஆச்சார்யா' மதியம் 3.30 மணிக்கு அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2' ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.
சன் டிவி: இன்று காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, பிற்பகல் 2.30 மணிக்கு தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’, மாலை 6.30 மணிக்கு ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்' படங்கள் ஒளிபரப்பாகின்றன. நாளை காலை காலை 11 மணிக்கு கவின் நடித்த ‘பிளெடி பெக்கர்', 2.30 மணிக்கு விஷால் நடித்த ‘சண்ட கோழி 2’, மாலை 6 மணிக்கு விஜய்யின் ‘பீஸ்ட்’ ஆகிய படங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.
கலைஞர் டிவி: இன்று காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’, 1.30 மணிக்கு கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, மாலை 6 மணிக்கு அஜித்தின் ‘துணிவு’ ஆகிய படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. நாளை காலை 10 மணிக்கு சூரி நடித்த ‘கருடன்’, மதியம் 1.30 மணிக்கு ‘லவ் டுடே’, மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி நடித்த ‘விடுதலை பாகம் 1’, இரவு 9.30 மணிக்கு ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT