Published : 11 Jan 2025 12:09 AM
Last Updated : 11 Jan 2025 12:09 AM

உழவர் விருதுகளை வழங்கி கார்த்தி கவுரவம்

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்குப் பங்களிப்பவர்களையும் கவுரவப்படுத்தி அங்கீகரிக்கும் வகையில் நடிகர் கார்த்தி, உழவன் ஃபவுண்டேஷனை நடத்தி வருகிறார். இதன் ‘உழவர் விருதுகள் 2025’ விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அரவிந்த் சாமி, சரண்யா பொன்வண்ணன், மாரி செல்வராஜ், பவா செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிறந்த பெண் வேளாண் தொழில் முனைவோர் விருது சுகந்திக்கும் நீர்நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது சியாமளாவுக்கும் வேளாண் பங்களிப்புக்கான விருது கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்துக்கும் வழங்கப்பட்டது. கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கான விருது, மருத்துவர் விஜயகுமாருக்கும் சிறந்த பெண்கள் வேளாண் கூட்டமைப்புக்கான விருது, நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் வழங்கி நடிகர் கார்த்தி கவுரவித்தார். விருதாளர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x