Published : 18 Nov 2024 03:16 PM
Last Updated : 18 Nov 2024 03:16 PM

‘ராக்காயி’ டைட்டில் டீசர் எப்படி? - நயன்தாராவின் ஆக்‌ஷன் அவதாரம்! 

சென்னை: நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘ராக்காயி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசர் எப்படி?: இருள் சூழ்ந்த லாங் ஷாட்டில் குழந்தை அழும் சத்தம் ஒருபுறமும் மறுபுறம் இடி இடிக்கும் சத்தமும் கேட்கிறது. சுற்றிலும் கட்டிடங்களே இல்லாத காலியான இடத்தில் ஒரே ஒரு வீடு. அதில் அழும் குழந்தையை கவனிக்காமல் மிளகாயை இடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அவரைக் கொல்ல வெளியில் ஒரு கூட்டமே நிற்கிறது. அடுத்து குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு சண்டைக்கு தயாராகிறார். அடுத்த ஷாட்டே அருவாளுடன் கம்பீரமாக நிற்கிறார். முன்னாலிருக்கும் கூட்டத்தை கண்டு அசராமல் ஆக்‌ஷனில் இறங்கும் அவர் எதிரிகளை அடித்து துவம்சம் செய்ய இறுதியில் முன்பு அரைத்த மிளகாய் பொடியை தூவுவதுடன் டீசர் நிறைவு பெறுகிறது.

‘பில்லா’ படத்தில் ஆக்‌ஷனில் மிரட்டினார் நயன்தாரா. அதன் பிறகு அண்மையில் வெளியான ‘ஜவான்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக சில ஸ்டண்ட் காட்சிகளில் வந்து செல்வார். முந்தைய படங்களில் நாயகர்களுடன் இடையிடையே வந்து செல்லும் அவர், தற்போது அவரை மையப்படுத்திய கதாபாத்திரத்தில் முழு ஆக்‌ஷனில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. அண்மையில் வெளியான அனுஷ்காவின் 'Ghaati' யிலும் ரத்தம் தெறிக்கும் வன்முறையில் ஆக்‌ஷன் களம் இருந்ததை கவனிக்க முடிந்தது.

ராக்காயி: அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் ‘ராக்காயி’. இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசைமைத்து வருகிறார். ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தெரிகிறது.

டைட்டில் டீசர்:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x