Last Updated : 20 Oct, 2024 12:17 PM

1  

Published : 20 Oct 2024 12:17 PM
Last Updated : 20 Oct 2024 12:17 PM

அனிருத் இசைக்காக காத்திருக்கும் இயக்குநர்கள்

இசையமைப்பாளர் அனிருத்

அனிருத்தின் பின்னணி இசை, பாடல் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு இயக்குநர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக அனிருத் மாறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்போதும் பல்வேறு படங்கள் இவருடைய பாடல் மற்றும் பின்னணி இசைக்காக காத்திருக்கின்றன.

தற்போது தமிழில் அனிருத் இசையில் ரஜினியின் ‘கூலி’, கமலின் ‘இந்தியன் 3’, விஜய்யின் ‘விஜய் 69’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே 23’, விக்னேஷ் சிவனின் ‘லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’, கவினின் ‘கிஸ்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இவை தவிர்த்து ரஜினி நடிக்கவுள்ள ‘ஜெயிலர் 2’ படமும் இருக்கிறது.

இதர மொழிகளில் இந்தியில் ஷாருக்கான் நடிக்கவுள்ள ‘கிங்’, அட்லி இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கவுள்ள படம் ஆகியவை இருக்கின்றன. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘விடி 12’, கெளதம் இயக்கி வரும் ‘மேஜிக்’, நானி நடிக்கவுள்ள ‘நானி ஓடிலா 2’ ஆகிய படங்கள் இருக்கின்றன. ஒரே சமயத்தில் இவ்வளவு படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

சமீபத்தில் பேட்டியொன்றில் அடுத்த 10 மாதங்களில் 50 பாடல்களை உருவாக்க வேண்டும் என்று அனிருத் கூறியிருந்தது நினைவுக் கூரத்தக்கது. இன்னும் சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனிருத்தை எப்படியாவது இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது அனிருத் ஒப்பந்தமாகும் படங்களுக்கு சுமார் 15 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்பதாக சொல்கிறார்கள். அதற்கும் பல படக்குழுவினர் ஒ.கே சொல்லி வருகிறார்கள் என்பது தான் பெரிய ஆச்சரியமே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x