Last Updated : 17 Aug, 2014 05:25 PM

 

Published : 17 Aug 2014 05:25 PM
Last Updated : 17 Aug 2014 05:25 PM

இயக்குநர் ஆகிறார் எடிட்டர் ஆண்டனி

தமிழ் திரையுலகின் பல பிரம்மாண்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய ஆண்டனி, அடுத்த ஆண்டு இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.

தமிழ்த் திரையுலகின் தற்போதைய முன்னணி எடிட்டர்களில் முக்கியமானவர் ஆண்டனி. இயக்குநர் ஷங்கர், கே.வி.ஆனந்த் உள்ளிட்டவர்களின் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுபவர் ஆண்டனி.

தற்போது பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி வருபவர்கள் இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்கள்தான். இவர் எடிட் செய்த படங்களைப் பார்த்து விட்டு 'ஆண்டனி கட்' என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு தனது எடிட்டிங்கால் பல்வேறு படங்களை தூக்கி நிறுத்தியவர் என்றால் மிகையாகாது.

இந்நிலையில், எடிட்டர் ஆண்டனி இயக்குநராகும் ஆசை வந்திருக்கிறது. மலையாளத்தில் ஜோ மேத்திவ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'ஷட்டர்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக இருக்கிறார்.

தற்போது 'ஐ', 'அனேகன்' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி வரும் ஆண்டனி, தனது எடிட்டிங் பணிகளுக்கு இடையூறு வராமல் இயக்குநர் முன்னோட்ட பணிகளையும் பார்த்து வருகிறார். 2015 தொடக்கத்தில் 'ஷட்டர்' ரீமேக் இயக்க திட்டமிட்டு இருக்கிறார் ஆண்டனி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x