Published : 11 Jul 2024 01:01 PM
Last Updated : 11 Jul 2024 01:01 PM
சென்னை: லைகா நிறுவன தயாரிப்பில், ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் நாளை திரைக்கு வரவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்துக்கு நாளை ஒரு நாள் (12.07.2024) மட்டும் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் நாளை (ஜூலை 12-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையடுத்து சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று தற்போது 'இந்தியன் 2' திரைப்படத்துக்கு நாளை ஒரு நாள் (12.07.2024) மட்டும் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, இந்தியன்-2 திரைப்படம் வெளியாகும் நாளான நாளை ஒரு நாள் மட்டும், 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை 12-ம் தேதி காலை 9 மணி முதல், மறுநாள் 13-ம் தேதி அதிகாலை 2 மணி வரை ஐந்து காட்சிகள் திரையிட முடியும். இதற்கான அரசாணையை உள்துறை செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT