Published : 12 Aug 2014 04:14 PM
Last Updated : 12 Aug 2014 04:14 PM
நடிகர் சூர்யா நடிக்கும் அஞ்சான் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை 1,400 திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாக இருக்கின்றது. இதுவரை நடிகர் சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே, இவ்வளவு அரங்குகளில் வெளியாகும் திரைப்படம் அஞ்சான் மட்டுமே. தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கில் 'சிக்கந்தர்' என்ற பெயரில் அஞ்சான் வெளியாகிறது.
"அஞ்சானுக்குப் போட்டியாக வேறெந்த பெரிய தமிழ் படமும் வெளியாகவில்லை என்பதால், மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளது. படத்தின் ட்ரெய்லரும், படத்துக்கான முன்பதிவும் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறுகிறார் சினிமா வர்த்தக நிபுணர் த்ரிநாத்.
அஞ்சான் வெளியாகும் அதே நாளில், இந்தியில் அஜய் தேவ்கன் நடித்துள்ள 'சிங்கம் ரிடர்ன்ஸ்' திரைப்படமும் வெளியாகிறது. ஆனால் இந்த இரண்டு திரைப்படத்திற்கும் மோதல் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார் த்ரிநாத்.
“சூர்யாவின் படம் தென்னிந்தியாவில் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியாகும், ’சிங்கம் ரிடர்ன்ஸ்' படத்தின் இலக்கு தென்னிந்தியாவைத் தவிர அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திரைகளாகும். இவ்விரண்டு படத்திற்குமான ரசிகர்கள் வேறு" எனகிறார் த்ரிநாத். .
ஒரு பெரிய நடிகர் நடித்து, அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, உலகளவில் டிஜிட்டலில் மட்டுமே வெளியாகும் முதல் தென்னிந்திய திரைப்படம் அஞ்சான் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யூடிவி இணைந்து தயாரித்துள்ள அஞ்சானை, லிங்குசாமி இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களாக சமந்தா, மனோஜ் பாஜ்பாய், வித்யுத், தலிப் தஹில், சித்ரங்கதா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT