Published : 01 Jul 2024 03:07 PM
Last Updated : 01 Jul 2024 03:07 PM

“மிரட்டும் ட்ரெய்லர் விரைவில்” - ‘தங்கலான்’ அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நிறைவடைந்ததாகவும், ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் எனவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தங்கலான் படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டது. என்னுடைய பெஸ்டை இப்படத்துக்கு கொடுத்துள்ளேன். இந்த அட்டகாசமான திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். உங்களை வியக்க வைக்கும் மிரட்டலான ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது. இந்திய சினிமா ‘தங்கலான்’ படத்துக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

தங்கலான்: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கடைசியாக ஜூன் 20-ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x