Published : 13 Apr 2024 06:02 AM
Last Updated : 13 Apr 2024 06:02 AM
சென்னை: தமிழில், சிங்கம், லிங்கா, அழகி, தாண்டவக்கோனே, வேல் என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் அருள்மணி. பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தன்னம்பிக்கை பேச்சாளருமான இவர், திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.
அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும் இருந்தார். மக்களவைத் தேர்தலுக்காக கடந்த 10 நாட்களாக பிரச்சாரம் செய்துவந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 65. அவரது உடல் சென்னைஈக்காட்டுத்தாங்கலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேற்றுமாலையில் இறுதிச்சடங்கு நடந்தது. மறைந்த அருள்மணிக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
பழனிசாமி இரங்கல்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிவெளியிட்ட அறிக்கையில், “கட்சி மீதும்,கட்சி தலைமை மீதும் விசுவாசம் கொண்டு,கட்சி கொள்கைகளை பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்தவர் அருள்மணி. அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT