Published : 26 Aug 2014 04:31 PM
Last Updated : 26 Aug 2014 04:31 PM
செல்வராகவனின் 'மாலை நேரத்து மயக்கம்' கதையினை தற்போது அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வருகிறார்.
ஆர்யா, அனுஷ்கா நடிக்க, செல்வராகவன் இயக்கத்தின் வெளியான படம் 'இரண்டாம் உலகம்'. அப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்ததோடு வியாபார ரீதியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது. அப்படத்தை தயாரித்த பி.வி.பி சினிமஸோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடால், செல்வராகவன் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இந்நிலையில், செல்வராகவனின் கதையான 'மாலை நேரத்து மயக்கம்' படத்தை தனது மனைவி கீதாஞ்சலி மூலம் படமாக்கி வருகிறார். ஆனால் இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. செல்வராகவனிடன் உதவி இயக்குநராக பணியாற்றியவர் கீதாஞ்சலி செல்வராகவன். அவரது இயக்கத்தில் உருவாகி வரும் முதல் படம் 'மாலை நேரத்து மயக்கம்' என்பது குறிப்பிடத்தக்கது. இதனை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார்.
தான் இயக்குநரானது குறித்து கீதாஞ்சலி செல்வராகவன், "செல்வராகவன் கொடுத்த அழகான கதைக்கு இச்சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது வாழ்த்துகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இயக்குநர் செல்வராகவனின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். ஆனால், அவர் சிறிது காலத்திற்கு குழந்தைகளோடு நேரத்தை செலவிட முடிவு செய்திருக்கிறார். ஒரு ரசிகனாக, செல்வராகவன் தனது மனநிலையை மாற்றி விரைவில் அதிரடியாக படம் இயக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT