Published : 07 Aug 2014 05:04 PM
Last Updated : 07 Aug 2014 05:04 PM

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 51. சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பின் காரணமாக அவர் இறந்தார்.

சுறா, படிக்காதவன் உள்ளிட்ட பல திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சுருளி மனோகர் வலம் வந்தவர்.

கடந்த ஆண்டு 'இயக்குநர்' என்ற திரைப்படத்தை இயக்கத் தொடங்கிய மனோகர், அதில் தன்னைப் போன்ற சிறிய நகைச்சுவை நடிகர்கள் பலரையும் நடிக்க வைத்தார். ஆனால், அவரது நோய் தீவிரமடைந்ததால் அந்தப் படத்தின் வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

சுருளி மனோகர் மனைவி மற்றும் 3 மகள்களுடன் வாழ்ந்து வந்தார். நாளை மதியம் அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் தங்களந்து அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x