Published : 21 Aug 2014 09:30 AM
Last Updated : 21 Aug 2014 09:30 AM

அஞ்சான்: ஆன்லைன் அமர்க்களம்

“என் பாதையில் முள்ளைப் போட்டு விடாதீர்கள்” என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு கச்சை கட்டிகொண்டு ‘அஞ்சான்’ படத்தை வலைதளங்களில் கிண்டலடித்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கிண்டல்களில் சில:

* ‘அஞ்சான்’ சஸ்பென்ச யார் கிட்டயும் சொல்ல வேணாமாம். நான் படம் பாத்ததையே சொல்லல, போர வர்றவன் எல்லாம் கலாய்க்கிறான்.

- மேவரிக்

* இறைவா, அஞ்சானை நாங்கள் பார்த்துகொள்கிறோம். சூர்யா ரிஜக்ட் பண்ண லிங்குசாமியின் மற்ற இரண்டு கதைகளில் இருந்து எங்களை காப்பாற்று.

- மொக்கராசு

* “3 நாட்களில் ‘அஞ்சான்’ வசூல் 30 கோடிப்பு 30 கோடி”

“30 கோ..! டி நீ பாத்த..?”

“ஆமாப்ப்ப்பு.. 30 கோடிப்பு!!”

- மண்டசகாயம்

* தன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போறதில்லைன்னு மனைவி சொல்லிட்டே இருக்கா.. அஞ்சானுக்கு கூட்டிட்டு போனா என்ன? #ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

- நாட்டி நாரதர்

* அஞ்சான் படத்துல 20 நிமிடம் காட்சி குறைப்பு..! (கண்ணாடியை திருப்புனா மட்டும் எப்படி ஜீவா வண்டி ஓடும் ??)

- சேட்டு

* அஞ்சான் நல்லா இல்லைன்னு சொல்லல, நல்லா இருந்திருக்கலாம்னுதான் சொல்றோம் // இப்படிக்கு பாலீஷா விமர்சிக்குற குரூப்பு

- அறுவை சர்ஜன்

* அஞ்சான் மொக்கையா இருந்தாலும் தாங்கிப்பேன்டா, ஆனா அஞ்சானுக்கு பயந்து எக்ஸ்பேன்டபிள் 3 ரிலீஸ தள்ளி போட்டானுங்கன்னு சுட்டாங்க பாரு ஒரு வடை.. அதான்டா தாங்க முடியலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x