Published : 12 Jul 2014 12:38 PM
Last Updated : 12 Jul 2014 12:38 PM
இயக்குநர் பாலா - சசிகுமார் இணையும் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு ஜூலை 14ம் தேதி முதல் சென்னையில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
'பரதேசி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாலா, சசிகுமாரை நாயகனாக்கி இயக்க இருப்பதாக அறிவித்த படம் 'தாரை தப்பட்டை'. இப்படத்தின் இசைக்காக மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்திருக்கிறார் இயக்குநர் பாலா. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே 'பரதேசி' படத்தில் பணியாற்றியவர்கள் தான்.
இப்படத்திற்காக கரகாட்டக் கலை உள்ளிட்ட பலவற்றை கற்று வந்தார் இயக்குநர் சசிகுமார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று அனைவரும் எதிர்நோக்கி இருந்தார்கள். ஆனால் அனைத்து கலைகளும் முறையாக கற்றவுடன் தான் படப்பிடிப்பு என்பதில் உறுதியாக இருந்தார் சசிகுமார் .
இந்நிலையில் தற்போது ஜூலை 14ம் முதல் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார். சசிகுமார் ஜோடியாக வரலெட்சுமி நடிக்க இருக்கும் நிலையில், சசிகுமாருக்கு தங்கச்சியாக பாடகி பிரகதி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஏற்கனவே 'பரதேசி' படத்தில் இடம்பெற்ற 'ஓர் மிருகம்' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பிரகதி. தற்போது 'தாரை தப்பட்டை' மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT