Published : 05 Apr 2023 08:44 AM
Last Updated : 05 Apr 2023 08:44 AM

பறவைகளைக் கூண்டுக்குள் அடைக்க நடிகை ஸ்ரேயா எதிர்ப்பு!

நடிகை ஸ்ரேயா

சமூக வலைதளத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா. இவர் சமீபத்தில், மும்பை அருகிலுள்ள அலிபாக்கில் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்குச் சென்றார். அங்கு கூண்டுக்குள் பறவைகளை அடைத்து வைத்துள்ளனர். அதை வீடியோ எடுத்துள்ள ஸ்ரேயா, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நீங்கள் பறவைகளை நேசிப்பவராக இருந்தால், அதை சிறை வைக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவை சுதந்திரமாகத் தான் இருக்க வேண்டும். சிறு கூண்டுக்குள் இத்தனைப் பறவைகளா? உங்களுக்குப் பொறுப்பு வேண்டாமா? இது சட்டப்பூர்வமானதா?” என்று கேட்டுள்ளார்.

இதற்கு சில நெட்டிசன்ஸ், ‘அவை வெளிநாட்டுப் பறவைகள். இங்கு விடுவித்தால், உயிர் வாழாது' என்று தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த ஸ்ரேயா, “பறவைகளை ஏன் வியாபாரமாக்க வேண்டும்? வேறு நாட்டுக்கு கொண்டு வந்து அதை ஏன் கூண்டில் அடைத்து வைக்க வேண்டும்? இதுபோன்ற வெளிநாட்டுப் பறவைகளை வாங்காமல் இருப்பதுதான் நல்லது என்பதை சுட்டிக்காட்ட முயன்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x