Published : 23 Sep 2017 04:59 PM
Last Updated : 23 Sep 2017 04:59 PM
ஜூனியர் என்.டி.ஆர் மூன்று வேடங்களில் நடித்து வெளியான 'ஜெய் லவ குசா' வெளியான இரண்டு நாட்களில் ரூ.60 கோடி வசூலித்துள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர், ராசி கண்ணா, நிவேதா தாமஸ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் 'ஜெய் லவ குசா'. கடந்த வியாழக்கிழமையன்று வெளியான இப்படம் உலக அளவில் முதல் நாள் 49 கோடி ரூபாய் வசூலித்தது. இரண்டு நாள் முடிவில் 60 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர் ஏற்று நடித்த மூன்று கதாபாத்திரங்களில், திக்குவாய் கொண்ட இளைஞராக ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இப்படம் குறித்து ஜீனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் "'ஜெய் லவ குசா' படத்தின் வரவேற்பு திருப்தியளிக்கிறது. ஒரு நடிகனாக இதை விட எதை எதிர்பார்க்க முடியும்? 'ஜெய் லவ குசா' குழுவின் சார்பில் அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
அவரது சகோதரர் கல்யாண்ராம் இப்படத்தைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT