Published : 03 Nov 2021 04:27 PM
Last Updated : 03 Nov 2021 04:27 PM
மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.
பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தமன் இசையமைத்துவரும் இந்தப் படத்தை மகேஷ் பாபு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன.
ஹைதராபாத், துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். இன்னும் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இதுவரை படத்தின் டீஸர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 2022-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி 'சர்காரு வாரி பாட்டா' வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வாரத்தில் 'ஆர்.ஆர்.ஆர்', 'பீம்லா நாயக்', 'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட படங்களும் வெளியாகவுள்ளன. இதில் 'ஆர்.ஆர்.ஆர்' மட்டும் ஜனவரி 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படங்களில் ஏதேனும் ஒரு படம் பின்வாங்கும் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்திருந்தார்கள்.
தற்போது 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Date is Locked for the Auction & the Action in Theatres #SarkaruVaariPaata Grand Release on 1st APRIL, 2022 #SarkaruVaariPaataOnApril1
— Mythri Movie Makers (@MythriOfficial) November 3, 2021
Super @urstrulyMahesh @KeerthyOfficial @ParasuramPetla @MusicThaman @GMBents @14ReelsPlus @saregamasouth pic.twitter.com/pLN14g2ER1
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT