ஓடிடி வெளியீட்டுக்குத் தயாராகும் 12த் மேன்


ஓடிடி வெளியீட்டுக்குத் தயாராகும் 12த் மேன்
கொச்சின்:

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகியுள்ள '12த் மேன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது.

மோகன்லால் - ஜீத்து ஜோசப் இருவருமே 'த்ரிஷ்யம்', 'த்ரிஷ்யம் 2' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியும் படம் '12த் மேன்'.

24 மணி நேரத்துக்குள் நடக்கும் த்ரில்லர் கதையாக இதை உருவாக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். இதனை ஆண்டனி பெரம்பாவூர் தயாரித்து வருகிறார். ஜூலை மாதம் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. முதலில் மோகன்லால் அல்லாத காட்சிகளைப் படமாக்கி வந்தது.

கடந்த மாதம் மோகன்லாலும் இணையவே, அனைத்து நடிகர்களையும் வைத்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்தப் படம் திரையரங்க வெளியீடாக அல்லாமல் நேரடி ஓடிடி வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. விரைவில் படத்தின் டீஸருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இதில் அனுஸ்ரீ, அதிதி ரவி, லியோனா, வீணா நந்தகுமார், சைன் டாம் சாக்கோ, சைஜு குரூப், பிரியங்கா நாயர், ஷிவதா, சந்துநாத், சாந்தி உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

WRITE A COMMENT

x