Published : 08 Jul 2019 12:31 PM
Last Updated : 08 Jul 2019 12:31 PM
தயான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி - நயன்தாரா இணைந்து நடித்துள்ள 'லவ் ஆக்ஷன் டிராமா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
மலையாளத்தில் தயான் ஸ்ரீனிவாசன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நிவின் பாலி. மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருக்கும் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பிதான் இந்த தயான்.
'லவ் ஆக்ஷன் டிராமா' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமானார். நீண்ட நாட்கள் கழித்து மலையாளத்தில் அவர் ஒப்பந்தமான படம் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷன் என்ற கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், ஷோபா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடித்துள்ளனர்.
துர்கா கிருஷ்ணா, அஜு வர்கீஸ், பாஷில் ஜோசப், ஸ்ரீனிவாசன், மல்லிகா சுகுமாரன் உள்ளிட்ட பலர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2017-ம் ஆண்டு படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், ஜுலை 2018-ல் தான் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
இந்நிலையில், 'லவ் ஆக்ஷன் டிராமா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு மலையாள திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓணம் பண்டிகைக்கு இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT