Published : 13 Aug 2017 05:29 PM
Last Updated : 13 Aug 2017 05:29 PM
நிவின்பாலி, அமலா பால் நடிக்கவுள்ள 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தின் கதைக்களம் குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி, அமலா பால் நடிக்கவுள்ள புதிய படம் 'காயம்குளம் கொச்சுண்ணி'. கோகுலம் கோபாலன் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.
'உதயநாணு தாரம்', 'மும்பை போலீஸ்', 'ஹவ் ஓல்ட் ஆர் யு' உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி மற்றும் சஞ்சய் இப்படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். பினோத் பிரதான் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் மற்றும் கோபி சுந்தர் இசை என படக்குழுவினர் இறுதிச் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தின் கதைக்களம் குறித்து படக்குழு தெரிவித்திருப்பதாவது:
காயம்குளம் கொச்சுண்ணி 19ஆம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் வாழந்த பழம்பெரும் திருடன் ஒருவரை பற்றிய படமாகும். அத்திருடன் அப்போது வாழ்ந்த செல்வந்தர்களிடமிருந்து பணம் , பொருள் போன்றவற்றை திருடி நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார்.
அவருடைய குழந்தை பருவம் முதல் வறுமை வாட்டியெடுத்தனால் இது போன்ற விஷயங்களில் அவர் ஈடுபட காரணம் என்று கூறப்படுகிறது. கேரள வரலாற்றில் இவரை போன்ற அன்பான , பயங்கரமான திருடன் ஒருவன் இன்று வரை இருந்ததில்லை என்பது தகவல். 1859 கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தியுள்ளார்.
இவ்வாறு படக்குழு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT