Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM
திருவனந்தபுரத்தில் சர்வதேசத் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தத் திரைப்பட விழாவின் நடுவர்களில் ஒருவராக நடிகை கெளதமி அழைக்கப்பட்டுள்ளார். இதற்காக திருவனந்தபுரம் வந்துள்ள அவர் அங்கு நிருபர்களை சந்தித்துப் பேசினார்.
சர்வதேசப் புகழ் பெற்ற இந்தத் திரைப்பட விழாவில் தான் நடுவராக இருப்பது பெருமைக்குரியது எனவும், இந்த வாய்ப்பை அளித்த சலச்சித்ரா அகடமிக்கும், அதன் சேர்மன் இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், புற்று நோயுடனான தன் போராட்டத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார், “34 வயது இருக்கும் எனக்கு இந்த நோய் வந்தது. இப்போது 44 வயது ஆகிவிட்டது. நோய் வந்தபோது என் மகளுக்கு 5 வயது இருக்கும். அவளுக்கு அம்மா, அப்பா எல்லாம் நான் தான். ஆனாலும் நம்பிக்கையுடன் இருந்தேன். மிக நல்ல மனிதர்கள் என்னுடன் இருந்தார்கள். அதனால் என்னால் அதிலிருந்து விரைவாக மீள முடிந்தது. கடந்த காலத்தைப் பற்றி நினைக்கலாம். எதிர்காலத் தைப் பற்றித் திட்டமிடலாம். ஆனால் நிகழ்காலம் என்ற ஒன்றை இழந்துவிடக்கூடாது என்பது என் பாணி. நான் இப்போது நிகழ் காலத்தில் வாழ்கிறேன்” என்றார்.
கமல்ஹாசன் பற்றிக் குறிப்பிடும் போது அவர் என்னுடைய முதுகெலும்பு போன்றவர் என்றார். இயக்குராவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, “இயக்குநராவது எனக்கு விருப்பத்திற்குரிய ஒன்றுதான். ஆனால் அதற்கு இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது”என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT